தலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது!

<!–

தலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது! – Athavan News

தலைநகரம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். வி.இசட்.துரை இயக்கவுள்ளார். இவர் முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தலைநகரம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை பக்கபலமாக அமைந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Leave a Reply