யாழ். வேலணை ஊடக தமிழகம் செல்ல முற்பட்டவர்கள் கைது!

அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் அகதிகளது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் யாழ் – வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நால்வர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.

பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply