நிபந்தனைக்கு ஆதரவு வழங்கினாலே பிரேரணைக்கு ஆதரவு! – 11 கட்சிகளின் கூட்டணி வலியுறுத்து

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி நிபந்தனை விதித்துள்ளது.

தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கினால் மாத்திரமே, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சாதகமாக பரிசீலிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், மாற்று அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை, இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply