நாடாளுமன்ற நுழைவு வீதி பூட்டு

கொழும்பு, மே 17

பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான முதலாவது அமர்வும் இதுவாகும்.  இந்த நிலையில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply