இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்கு கோடீஸ்வரன் எம்.பி.யின் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கி வைப்பு!

கிரிஷாந்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, கமு/திகோ/இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக ரூபா 250,000 பெறுமதியான அத்தியாவசியத் தளபாடங்கள் கடந்த (24) கையளிக்கப்பட்டன.

பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது பாடசாலையின் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், சிறந்த கற்றல் சூழலை உருவாக்க ஏனைய தேவைகளும் எதிர்காலத்தில் படிப்படியாக நிவர்த்தி செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ. தர்மதாச, பிரதேச சபை உறுப்பினர் பி. கதிகரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply