கியூபா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா இணக்கம்

அமெரிக்கா, மே 17

கியூபா மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்ட காலப்பகுதியில் கியூபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையிலே, கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, அமெரிக்காவில் உள்ள கியூபா நாட்டவர்கள் தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல் மற்றும் நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க வீசாக்களை வழங்குவது குறித்த பரிசீலனையினை துரிதப்படுத்துவது தொடர்பிலும் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply