600 லீற்றர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர் சிக்கினார் !!

<!–

600 லீற்றர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர் சிக்கினார் !! – Athavan News

600 லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்து மீள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுகின்றன.

மீள் விற்பனை நோக்கத்திற்காக முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள மீண்டும் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் நிற்பதை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Leave a Reply