
வத்தளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஹெந்தல வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இன்று சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொலை நடந்த விதம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.