
வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோர் போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு செல்ல பலர் ஆர்வமாக உள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போலி முகவர்கள் பலர் மோசடிகளைில் ஈடுபடுகின்றனர் என்று நாளாந்தம் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குக் கிடைக்கின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். எனவே போலி முகவர்கள் யாராவது வேலை வாய்ப்புக்களை உறுதியளித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டதா என ஆராய்ந்து, தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
அத்துடன் இந்த முகவர் நிலையங்கள் சட்டபூர்வமாக சரியானவையா என்பதை அறிந்துகொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்திலிருந்து எப்போதும் வழிகாட்டலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது