அம்பலாந்தோட்டை – வெலிபட்டன்வில பகுதியில் கடல் அலையில் சிக்குண்ட நான்கு பேரில், இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.
வெலிபட்டன்வில பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், அவர்கள் அங்குள்ள கடற்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்கள் கடல் அலையில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
55 வயதான தாய், அவரது 16 வயதான மகன் மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து 55 வயதான தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 18 வயதுடைய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், ஏனையவர்கள் காணாமல் போயுள்ளதோடு, அவர்களை தேடும் பணிகளில் கடற்படை மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்