நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பலில் இருந்து எரிவாயு தரையிறங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை தான் பதவியேற்றதன் பின்னர் விநியோகம் ஆரம்பமாகும் திகதி தீர்மானிக்கப்படும் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் சுமார் 7 நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி, நேற்று இரவு அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் இன்று ஆரம்பமானது.
இன்று சில பிரதேசங்களில் பொதுமக்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.