இன்றைய ராசிபலன் 15.06.2022

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்
தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர்உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்

கன்னி

கன்னி: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனவசதி பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்குவரும்.அழகும் இளமையும் கூடும். விருந்தினர் வருகை
அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்

மகரம்

மகரம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்துபோகும் . அசைவ உணவுகள் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் .பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: குடும்ப கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் முக்கிய புதிய ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *