பதுக்கல் மற்றும் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் மோசடி வர்த்தகர்களைக் கண்டறிய முப்படையினரை களத்தில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கமத் தொழில் மற்றும் வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தொழில் அற்றோர் சங்கம் மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அரிசியைப் பதுக்கி வைத்திருப்போர் மற்றும் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்வோரைக் கண்டறிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையை கூடுதல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளேன்.
அவர்களுக்கு ஆளணி வளப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் முப்படையினரின் ஒத்துழைப்பு அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
கமத்தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தொழில் அற்றோர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்