நகைச்சுவையாக மாறிபோயுள்ள ஜனாதிபதி பதவி! – தேரர் சாடல்

ஜனாதிபதியின் உத்தரவு இன்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களப் பேராசிரியர் வண. அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி இரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இதனை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.

இந்நிலையில், அந்த சவாலை முறியடிக்க ரணில் விக்ரமசிங்க கையாண்ட அரசியல் தந்திரம் பற்றிய உண்மைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இந்தியாவின் தலையீடு குறித்தும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

கச்சத்தீவு பகுதியை கைப்பற்றுவதே இந்தியாவின் இலக்காக இருக்கலாம், இதனை உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதிப்படுத்தும் தகவல்கள் தற்போதும் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *