
யாழ் சரசாலை தெற்கில் நேற்று முன்தினம் ஆலயத்துக்குச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆலயத்திற்கு சென்று வணங்கிய பின்னர் நடந்து வீடு திரும்பிய வேளையில் உள் வீதி ஒன்றில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்மணியின் சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது .
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
பிற செய்திகள்