
கொழும்பு,ஜுன் 18
நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் நேரடியான பங்களிப்புக்களை நல்கிவரும் 9 முன்னணி போராட்டக்காரர்களைக் கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவின் வீதிகளிலும் பொலிஸ் தலைமையகம் முன்பாகவும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தி இவர்களைக் கைது செய்ய கோட்டை நீதிவான் திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.
வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரனிந்து சேனாரத்ன எனும் ரெட்டா, ஜகத் மனுவர்ன, தம்மிக முனசிங்க, ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரையே கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத கூட்டமொன்றின் உறுப்பினராக செயற்பட்டமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பலாத்காரம் செய்தமை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துக்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்துள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.





