தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை!

தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ எரிபொருள் நிலையங்களில் இருந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை உற்பத்திகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தேயிலை சபையினால் அனுமதிபத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த அனுமதிகளின் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்வது நடைமுறைக்கு சாத்தியம் அற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொடுக்க டிப்போ அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்தவாரம் முதல் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கபட்டுள்ளதாக தேயிலை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply