கண்டியில் வரகாககொட தேரருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு, அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் வரகாககொட ஞானரத்தின தேரரை சந்தித்து ஆசியும் பெற்றுள்ளார்.

இதன்போது, சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இ.தொ.காவின் உபச்செயலாளரும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமியும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply