வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply