பிரபல பிக்குவிற்கு போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு! விசாரணையில் அம்பலம்!

பிரபல பிக்கு ஒருவருக்கு, போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொழும்பில் உள்ள பிரபல விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்கு கார், சொகுசு வீடு போன்றவற்றை போதைப்பொருள் வியாபாரியான தெமட்டகொட ருவன் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொகுசு வீடு கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோடிகணக்கிற்கு பெறுமதியான வெள்ளை நிற காரினை ஒப்படைக்குமாறு பிக்குவிற்கு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் இதுவரை காரினை ஒப்படைக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வாகனத்தை இன்று ஒப்படைப்பதாக பிக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகனம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply