
இலங்கை மத்திய வங்கி நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 80 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 78 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 432 ரூபா 12 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 415 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 08 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 352 ரூபா 81 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.