விஜயை சந்திக்க போகும் கார்த்தி ?? விஷயம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இதே ஸ்டூடியோவில் தான் நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுகிறது.

இதனால் நடிகர் விஜய் மற்றும் கார்த்தி ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply