கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 54 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 543 ஆக காணப்படுகின்றது.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply