ஜெர்மனியை புரட்டியெடுக்கும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலி…1300 பேர் மாயம்

மேற்கு ஜெர்மனியில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஜெர்மனியில் கடந்த 14ம் திகதி இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜெர்மனி மட்டுமின்றி அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன.பல கட்டடங்கள் இடிந்து விழும் சூழலில் உள்ளன.

இதுவரை ஜெர்மனியில் 59 பேரும், பெல்ஜியத்தில் 6 பேரும் பலியாகி உள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளான ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் 1,300க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இது போல் பெல்ஜியத்தில் பெய்த மழையில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply