தமிழ் சினிமாவில் பழம் பெறும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மகள்களில் ஒருவர் தான் ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்த இவர் தமிழில் தனுஷுடன் தேவதையை கண்டேன் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் மாதவனுக்கு தோழியாக பிரியமானவளே படத்தில் நடித்தார். நடிகர் ஜீவாவுடன் இணைந்து தித்திக்குதே படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்து வந்தபோதே கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.
இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தாள். மகளுக்கு ரூபிகா என பெயர் வைத்துள்ளனர். தற்போது ஸ்ரீதேவி தன்னுடைய மகளுடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருகின்றது.