
நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?
நமது சமையலறையில் இயற்கையாகவே சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவைத் தரும் பல்வேறு பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட்டிங், மாய்ஸ்சரைசிங், பிரைட்னிங், ஸ்மூதினிங் செய்யும் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளன.
தேன்
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர். இதை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது மாய்ஸ்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம்.
நீங்கள் தேனை பப்பாளி, வாழைப்பழம் அல்லது புதிய ஆரஞ்சு சாறுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து, அதை மாய்ஸ்சரைசராக அப்ளை செய்யலாம். இதைத் தொடர்ந்து செய்வதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாறும்!