ஊறவைத்த பாதாம் அல்லது உலர்ந்த பாதாம் – இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது?

பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. சாதாரண பாதாம் அல்லது ஊறவைத்த பாதாம் – இவை இரண்டில் எது ஆரோக்கியமானது என்று தெரிந்து கொள்ள விரும்புறீர்களா?

பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது. இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்து கூட சாப்பிடலாம்.

பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான் ஏனென்றால், ஊறவைத்த பாதாம் மென்மையானதாக இருக்கும் மற்றும் எளிதில் செரிமானம் ஆகும். மேலும், இவ்வாறு ஊறவைத்து சாப்பிடுவது, அவற்றின் ஊட்டச்சத்துக்களை மிகச் சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு நம் உடலுக்கு உதவுகிறது. பாதாம் பருப்பை ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊறவைத்தால் போதும்.

பாதாம் பருப்பின் சில ஆரோக்கிய நன்மைகள்

– பாதாம் பருப்பு உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
– இவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
– செரிமான செயல்பாட்டில் நமக்கு உதவுகிறது.
– முடி வளர்ச்சியைத் தூண்டும்.
– உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.
– இவை கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
– இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது.

இவை தவிர, ஊறவைத்த பாதாம், ஆன்டி ஆக்ஸிடண்ட்டின் ஓர் நல்ல மூலம் ஆகும். மேலும், ஊறவைத்த பாதாமில் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் பாதாம் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பருப்பு நமக்கு பல நன்மைகளை வழங்குவதால், இதை நீங்கள் தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் அவற்றை ஊறவைத்து சாப்பிட மறக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *