அதிக விலையில் முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை ஒன்றினை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தக அமைச்சினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து உற்பத்தியாளர்களினால் குறித்த விலை நிர்ணயம் பரிசீலிக்கப்பட்டு முட்டை ஒன்றினை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்