பண்ணையாளர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்!

கோழிகளுக்கான தீவனத்தின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச தீர்மானத்தின் விலைகளுக்கு அமைய முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது.
இந்த முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முட்டையொன்றை 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *