இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்றும் இரண்டாவது நாளாகவும் விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

மேலும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *