வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக இன்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும், பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன், தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்பட்டதோடு உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *