கங்காராம விகாரையில் திடீரென ஒன்றுகூடிய ஐ.தே.க வின் முக்கிய புள்ளிகள்!(படங்கள் இணைப்பு)

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு இன்று (4) நடைபெறவுள்ளதுடன், அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத போதி பூஜை நேற்றையதினம் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

மறைந்த தலைவர்கள் மற்றும் கட்சியின் நிறுவனர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், மகா சங்கரத்னய, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அகிலவிராஜ் காரியவசம், சமன் ரத்னப்பிரிய ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *