திரைப்படங்களில் நடிக்க தயாராகும் ரஞ்சன்!

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் படங்களில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.

புதிதாக ஆறு திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதாவது ஒர் சந்தர்ப்பத்தில் தனக்கு மீளவும் சிவில் உரிமைகள் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக ரஞ்சன் சிங்கள பத்திரிகையொன்றிடம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் இலங்கையின் முன்னணி திரை நட்சத்திரங்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *