திங்கள் நள்ளிரவு முதல் குறையும் எரிவாயு விலை: புதிய விலை விபரங்கள் அறிவிப்பு

கொழும்பு, செப். 5: லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று திங்கள்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 113 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,551 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின புதிய விலை 1827 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 848 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *