
கொழும்பு,செப் 08
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பில் ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.