
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
36 பாரிய மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சளை இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
இதில், பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மஞ்சள் மேலதிக விசாரணைகளுக்காக ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.