வவுனியாவில் தென்னை பயிர்செய்கை சபையின் வயல் விழா நிகழ்வு!

வவுனியாவில் தென்னை பயிர் செய்கை சபையினரால் நடத்தப்பட்ட வயல்விழா நிகழ்வு, ஓயார் சின்னக்குளத்தில் அமைந்துள்ள றோயல் பண்ணையில் நேற்று (08-09-2022) வவுனியா தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.என்.கே. விகல்ல தலைமையில் நடைபெற்றது.

வினைத்திறன், மிக்க தெங்கு உற்பத்தியாளராக மிளிர்வதற்கான பாதை நோக்கிய பயணம் என்னும் தொனிப்பொருளில்’ தெங்கு செய்கை விவசாயிகளுக்கான தெங்கு செய்கை தொடர்பாக மேலதிக அறிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி. பிரியதர்சினி சஞ்சீவன் கலந்து கொண்டிருந்தார். வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பத்து தென்னை பயிர் செய்கையாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, வயல்விழா நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாற்பதிற்கு மேற்பட்ட தென்னை பயிர் செய்கையாளர்களுக்கு, தென்னை நாற்று நடுகை, பசளை வட்டம், சேதனப்பசளை தயாரிக்கும் முறை, நோய் பீடைக் கட்டுப்பாட்டு முறை, தென்னங்கன்றுகளுக்கான நீர்ப்பாசன முறைமை போன்ற களப்பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓயார் சின்னக்குளத்தில் அமைந்துள்ள றோயல் பண்ணையின் உரிமையாளர், பொன்னம்பலம் ஈஸ்வரனின் ஒருங்கமைப்பில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. நிகழ்வில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மதன்ராஜ் குலாஸ், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் காஞ்சனா இரட்ணம், விவசாயிகள் மற்றும் வவுனியா தென்னை பயிர்செய்கை சபையின் உத்தியோகத்தர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!

பக்கிங்காம் அரண்மணையின் முன்னால் திரண்ட மக்கள்!

பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு!

அமெரிக்கா செல்கின்றார் பஸில்!

சலுகைகளும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம்-இராஜாங்க அமைச்சர்கள் உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *