மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் மண்டூர் தொடக்கம் வெருகல் வரை இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இந்நிலையில், திருகோணமலை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெருகல் சித்திரவேலாயுத ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் ஆன்மீக பாத யாத்திரை இடம்பெற்றது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆன்மீக பாத யாத்திரையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆன்மீக பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் கையில் நந்திக்கொடி ஏந்தி அரோகரா கோசத்துடன் செல்லும் வீதியிலுள்ள ஆலயங்களை தரிசித்து செல்கின்றனர்.
மேலும்,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆன்மீக பாத யாத்திரை எதிர்வரும் வியாழக்கிழமை மாலை வெருகல் சித்திரவேலாயுத ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த, யாத்திரையானது செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம், மாமாங்கேஸ்வரர் ஆலயம், சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், மாங்கேணி செல்வ விநாயகர் ஆலயம், வாகரை செல்வ விநாயகர் ஆகிய ஆலயங்களில் இரவு வேளையில் தங்கியிருந்து வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.
எனவே அனைத்து இந்து அடியார்களையும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.




பிற செய்திகள்
ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!
பக்கிங்காம் அரண்மணையின் முன்னால் திரண்ட மக்கள்!
பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு!
சலுகைகளும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம்-இராஜாங்க அமைச்சர்கள் உறுதி!