
தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனியொன்று கிண்ணியா தள வைத்தியசாலையின் முன்னால் இருந்து நாளை (10) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
“உதவ நாம் தயார்” எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெறவுள்ள குறித்த நடைபவனியானது கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைபவனியானது கிண்ணியா பிரதான வீதியூடாக சென்றடையவுள்ளது.
எனவே பொது மக்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்