
கொழும்பு. செப் 10
புகையிரத பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகையிரத பயணிகளுக்கு குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சிட்டு வழங்கப்படுவதில்லை என சில பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த, பிரயாணச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான காகித தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.