வவுனியா நகரசபையில் ஒன்று கூடிய 600 ற்கும் மேற்பட்ட சிறார்கள்!

வவுனியா நகர கோட்டமட்ட முன்பள்ளிகளின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று காலை 9மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீரவாகு பரஞ்சோதி தலமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்

மேலும், சிறப்பு விருந்தினர்களாக விதுர்சனா அறக்கட்டளை ஸ்தாபகர் விஜயகலா, அதன் செயலாளர் நகரசபை உறுப்பினர் காண்டீபன், முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வீரசங்கம் பிரதிக்கல்வி பணிப்பாளர் கல்வி முகாமைத்துவம், மரியநாயகம் கோட்டக்கல்வி பணிப்பாளர், தவேந்திரலிங்கம் உதவிக்கல்வி பணிப்பாளர் ஆரம்ப பிரிவு, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதேவேளை நிருபா சச்சிதானந்தன் (நகரம்-1 முன்பள்ளி இணைப்பாளர்), குமரன் செல்வராணி (நகரம்-2 முன்பள்ளி இணைப்பாளர்), தர்மலிங்கம் விஸ்வா (பூவரசங்குளம் முன்பள்ளி இணைப்பாளர்), முனர்பா (பூந்தோட்டம் முன்பள்ளி இணைப்பாளர்) ஆகியோர் கெளரவ விருந்தினர்காளாக கலந்து கொண்டிருந்தனர்

மேலும், இந்நிகழ்வில் நூற்றுக்கனக்கான ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறார்களின் நிகழ்வுகளை கண்ட களித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

இந்நிகழ்வில் 100 முன்பள்ளிகளை சேர்ந்த 600 சிறார்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *