கேகாலையில் கோரவிபத்து!

கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் மகிழூந்து ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் 03 பேர் உயிரிழந்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *