
பதுளை ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் நேற்று இரவு தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் குடியிருப்பு வீடொன்றில் வசித்து வந்த 83 மற்றும் 55 வயதுடைய பெண்களே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எச்.எம்.ரன்மெனிக்கா (85) ஆர்.எம்.ஜெயவதி (55) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். ஆர்.எம்.மிசிநோனா என்பவர் (60) காயமடைந்துள்ளார்.