
பொருப்பற்ற முறையில் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்தது மாத்திரமல்ல, இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளால், சொத்து சேர்க்கின்ற விவகாரத்திலும், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க தயாராகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வ ஜனநீதி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் ஊர்திவழி கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர் .
அவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ‘சமூகம் மீடியா’வுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜெனீவாக் கூட்டத்தொடரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரேரணை மீண்டும் ஒருமுறை புதிய சில அம்சங்களை உள்வாங்கி இருக்கின்றது.
இதில் உள்ள புதிய அம்சங்கள், குறிப்பாக, கடந்த கால அரசாங்கங்கள் செய்த ஊழல்கள் சம்பந்தமாக, அதனுடைய முக்கியஸ்தர்கள், அவர்களுடைய வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை கையப்படுத்துவது போன்ற சில முக்கியமான சட்டமூலங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டி சர்வதேச சமூகம் சில புதிய நிபந்தனைகளோடு இந்த பிரேரணையை முன்மொழிந்திருக்கின்றமை மிகத் தீரிவமாக உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்துகின்றது என்பதனை காண முடிகின்றது.
அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த மக்கள் எதிர்ப் போராட்டங்களின் பின்னணியில் அரச உயர்மட்டங்களின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாட்டின் பொருளாதார சீரழிவு நடத்திருக்கின்றது.
பொருப்பற்ற முறையில் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்தது மாத்திரம் அல்ல, இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளால், சொத்து சேர்க்கின்ற விவகாரத்திலும், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க தயாராகின்றது.
யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இடம்பெற்ற உயிர்ச்சேதங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்று அரசாங்கம் கொடுத்த உத்தரவாதத்தை மீறி இன்றைய ஆட்சியாளர்கள் அதனை மீளவும் தொடங்கி இருக்கின்ற விவகாரங்கள் கடினமான விமர்சனத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கின்றோம்.
இதனடிப்படையில், இந்த ஆட்சியாளர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரின் போது தங்களுக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகளை இன்னும் நெகிழ்வுபடுத்துவதற்கு சர்வதேச சமூகம் இடம்தரும் என்று ஏதாவது எதிர்பார்ப்பு இருக்குமேயானால் அது சாத்தியமாகாது.- என்றார்.
பிற செய்திகள்