‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 41 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை தலைமன்னார் கிராமம் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த செயல் திட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- இங்கிலாந்து சென்ற இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து விசாரணை!
- கண்டி – கொழும்பு பிராதான வீதியில் கோர விபத்து! மூவர் பலி
- மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி! நாமல் அறிவிப்பு
- மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்! – வர்த்தக கூட்டமைப்பு
- நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka