பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 13.09.2022 அன்று முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை பம்பைமடு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள SH 4 மண்டபம், சூசைரட்ணம் கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரம் 2021 ஆண்டு பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க எதிர் பார்த்திருக்கும் அனைத்து பாட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்தல், இணைய வழிப்பதிவு மற்றும் பல்கலைக்கழக பாடத் தெரிவு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் தொடர்பாகவே குறித்த கருத்தரங்கு இடம்பெற இருக்கின்றது.
குறித்த கருத்தரங்கானது தொழில் வழிகாட்டல் அலகு, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெளிச்சம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்