கடந்த மூன்று வருடங்களில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் எண்ணெய்க் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளின் பெயர்களில் சுமார் 60 எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 1343 ஆகும்.
இதற்கமைய, அண்மையில் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை அதிகரிப்பால், 7 கோடி ரூபாய் கூடுதல் செலவை எண்ணெய் நிறுவனம் ஏற்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்