IMF அறிக்கை பற்றி விவாதம் அவசியம் – எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை மீண்டும் விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *