
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 101வது நினைவு நாள் இன்றைய தினம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு முன்னால் நடைபெற்றிருந்தது .
அதனையடுத்து தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது ;
சுப்ரமணிய பாரதியாரின் 101 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாண நல்லூரிலே அவரது நினைவுத் திருவுருவச் சிலைக்கு நாங்கள் மலர் மாலை அணிவித்து நினைவு கூர்ந்திருக்கின்றோம்.
சுப்ரமணிய பாரதியார் மிகத்தெளிவாக விடுதலைக் கவிஞனாக ,சமூக சீர்திருத்த கவிஞனாக,சாதி அடக்கு முறைகளுக்கு எதிராக ,பெண் விடுதலை ஆகியவற்றுக்கு குரல் கொடுத்த ஒரு கவிஞன்.
அவர் பல விடுதலைக் கவிதைகளை படைத்தவர்.அந்தவகையிலே சுப்ரமணிய பாரதியாரின் நினைவுகளை போற்றுவதன் ஊடாக விடுதலை உணர்வில் ” அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ” என்று பாடி கோஷங்களை எழுப்பிய மகா கவியினை போற்ற வேண்டும் என்றார் .
பிற செய்திகள்