
முட்டைக்கான சரியான விலையை நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்து நடைமுறைப்படுத்தாததால் வர்த்தகர்களும் நுகர்வோரும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் சில்லறை விலை 43 ரூபாவாக இருந்தாலும், நாடு பூராகவும் முட்டை வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.ஐ.ஏ.எம். ஞானதிலக்க தெரிவித்தார்.
முட்டைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும், இல்லை என்றால் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர், நுகர்வோர் அதிகாரசபை ஒரு விலையையும் அமைச்சர்கள் வேறு விலையையும் நிர்ணயிப்பதால் சில வியாபாரிகள் முட்டை விற்பனையை நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
பிற செய்திகள்